ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஷ்ணு கோயில் சீரமைப்பு பணிகளுக்காக விக்டோரியா மாகாண அரசு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 1994ல் கட்டப்பட்ட சிவா விஷ்ணு கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலின் புனரமைப்பு பணிகளுக்காக விக்டோரியா மாகாண அரசு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
இம்மாகாண கலாசாரத் துறை அமைச்சர் ராபின் ஸ்காட் நேற்று இந்த கோயிலுக்கு வந்தபோது அளித்த பேட்டியில், “சிவா விஷ்ணு கோயிலின் நுழைவு வாயில் மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் பாதைகளை புனரமைப்பதற்காகவும், 300 வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியை மேம்படுத்துவதற்காகவும் விக்டோரியா மாகாண அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்த புனரமைப்பு மூலம் இந்து மக்கள் தங்களுடைய இரக்கம், சுயநலமற்ற பண்பு, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ளவும் வழி ஏற்படும்” என்று தெரிவித்தார்.
* 2016ல் ஆஸ்திரேலியாவில் வசித்த இந்துக்களின் எண்ணிக்கை 4.40 லட்சம்.
* 2006ல் இருந்து 10 வருடத்தில் இந்த எண்ணிக்கை 1.9% வளர்ச்சி கண்டுள்ளது.