ரஜினியின் புதிய கட்சிக்கு ஆதரவா?: நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. நடிகர் எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்ததற்கு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர் கூறிய குற்றச்சாட்டு ஏற்று கொள்ள முடியாதது. நடிகர் கமல்ஹாசன், ஆர்கே நகர் தொகுதி மக்களை பிச்சைக்காரர்கள் என்றும், டிடிவி.தினகரனை திருடன் என்றும் கூறியதை பற்றி, அவரைதான் கேட்க வேண்டும். அதுதான் சரியானதாக இருக்கும். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே அரசு, உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றார். அப்போது, ‘‘நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவருக்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா’’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. அப்போதைய சூழ்நிலையில், அதுபற்றி பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும்’’.இவ்வாறு அவர் கூறினார்.