சீனாவில் சான்வெய் பகுதியில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமேயான குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியிலிருந்த சீ.சி.டீவி கமரா மூலம் இந்த கொடிய செயலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த சந்தேக நபரை விசாரணை செய்த போது, அது தன்னுடைய குழந்தை என்றும், குழந்தை பிறந்தவுடன் ஊதா நிறத்தில் மாறியதால் குழந்தைக்கு கொடிய நோய் இருப்பதாக கருதி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாக குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.
இச் சம்பவம் குறித்து வைத்தியர்கள்,
குளிரான சமயத்தில் குழந்தை பிறந்ததால், நிற மாற்றம் ஏற்பட்டதாகவும், மற்றபடி குழந்தை அரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் குழந்தையை காப்பாற்றிய பெண்மணியை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை பொலிகின்றனர்.