கொட்டாஞ்சேனையின் பிரபல தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 25 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு கொட்டாஞ்சேனையில் பிரபல பாடசாலையொன்றில் இவ்வாண்டு தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவனை அவ்வகுப்பில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான 9 வயது மாணவன் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த ஆசிரியர் நேற்று முன்தினம் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசியர் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழு ம்பு கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.