மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1080 காளைகள், 1188 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டுள்ளது. காளை, வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை தர மருத்துவக் குழு தயார்நிலையில் உள்ளது. 7 கிராமத்து மரியாதைக் காளைகள் முதலில் களத்தில் இறக்கி விடப்பட்டன.