ஜெ.,சிகிச்சை விவகாரம்: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை தாக்கல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தாக்கல் செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகள் தொடர்பான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவை மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி கமிஷன் உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்களது அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே பல பெட்டிகளில் மருத்துவ ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. தற்போது எய்ம்ஸ் தாக்கல் செய்த அறிக்கை சரியானதுதானா என்பதை ஆராய தனி மருத்துவர்கள் குழுவை நியமிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பலரிடம் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.