அமெரிக்காவை புரட்டிப் போட்ட 'பாம்' பனிப்புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அமெரிக்காவை புரட்டிப் போட்ட 'பாம்' பனிப்புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பாஸ்டன்: அமெரிக்காவை கடுமையான பனிப்புயல் புரட்டிப் போட்டு விட்டது. சுமார் ஏழு புள்ளி 8 அங்குலம் பனி மூடியுள்ளது. பாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப் புயல், அண்மைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாஸ்டனில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடல் அலைகள் சீற்றம் காரணமாக அருகில் இருந்த சுரங்க ரயில் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. நியுஜெர்சியில் இருந்து வடக்கு கரோலினா வரை போடப்பட்ட தணணீர் குழாய்கள் உடைப்பெடுத்தன.

பாண்டா கரடிகளுக்கு பாதிப்பில்லை
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பனிப்புயல் தாக்கிய நிலையில் சிவப்பு நிற பாண்டா கரடிகள் எப்படி அதில் தாக்குப்பிடிக்கிறது என்னும் காட்சிகள் நியுயார்க்கின் டிரவர் வனவிலங்குப் பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஊரே உறைந்துப் போய் இருந்தாலும் இந்த சிவப்பு பாண்டாக்கள், அதைப் பொருட்படுத்தவில்லை. அவை மூங்கிலை உண்டு வழக்கம் போல் நடமாடிக் கொண்டிருக்கின்றன.

About Unknown