திருவனந்தபுரம்: சென்னையைச் சேர்ந்த 14 பேர் அடங்கிய பக்தர்கள் நேற்று முன்தினம் சபரிமலை வந்தனர். கரிமலை வனப்பாதை வழியாக இவர்கள் சன்னிதானத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நிரோஷ்குமார் (30) என்ற பக்தர் வழிதவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டார். அவரை தேடியபோது கரிமலை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நிரோஷ்குமார் இறந்தார்.
இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சபரிமலை வனப்பகுதியில் காசு வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கூடலூர் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.இவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் 4 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.