அதிகாலை வேளையில் வீடொன்றுக்குள் புகுந்த முதலையொன்றை பொதுமக்கள் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த முதலை புகுந்துள்ளது. வீட்டினுள் புகுந்து மறைந்துகொண்ட ஆறு அடி நீளமான முதலையை அவதானித்த வீட்டு உரிமையாளர் அயலவர்களின் உதவியுடன் முதலையை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
வவுனியா பிரதேசங்களில் உள்ள குளங்களின் நீர் வற்றியதன் காரணமாக முதலைகள் வெளியேறி வீடுகள் மற்றும் வயல் நிலங்களை நோக்கி படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.