மதிமுக பொதுக்குழு மார்ச் 6ல் கூடும்: வைகோ அறிவிப்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 6ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:மதிமுக 26வது பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச் 6ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் ஈரோடு ராமநாதபுதூர். அக்ரஹாரம் டிஓ பவானி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கிறது. அவை தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது