அஸ்தனா: ரஷ்ய நகரமான சமராவில் இருந்து தெற்கு கஜகஸ்தானில் உள்ள நகருக்கு வோல்கா ஆற்றின் வழியாக பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 2 ஓட்டுனர்கள் மற்றும் 55 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அக்டோபே பகுதியில் பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
தீ மளமளவென பரவியதால் அதில் இருந்து தப்பிக்க முடியாமல் பேருந்தில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். 5 பேர் மட்டும் பேருந்தில் இருந்து குதித்து உயிர்தப்பிய நிலையில் மீதமுள்ள 52 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர்தப்பிய 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.