வாஷிங்டன்: 2018-ன் முதல் சந்திரகிரகணம் இம்மாதம் 31-ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இது ஆகும். மேலும் இது ‘நீல நிலா’ (ப்ளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 31- ம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது. இதேபோல் மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழுயாகத் தெரியும். மேலும் அலாஸ்கா, வடமேற்கு கனடா, ஹவாய் ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் முழுமையாக தெரியும். இருப்பினும் வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.
இந்த முழு சந்திர கிரகணம் சுமார் 77 நிமிடங்கள் வரை நிகழ வாய்ப்புள்ளது என்றும் முழு கிரகணம் தெரியும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028ம் ஆண்டு தான் அடுத்த முழு சந்திரகிரகணம் நிகழும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் இது முக்கியவத்துவம் உள்ள நிகழ்வாக பார்க்கப்படுகிறது.