தமிழகத்தில் தொடர்ச்சியாக மக்கள் விரோத திட்டங்களை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பறிக்க கூடிய செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது மத்திய பாஜக அரசு. தஞ்சை கதிராமங்கலமும், நெடுவாசலுமே இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இந்நிலையில், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் மத்திய அரசு செய்துவருகிற திட்டங்களால் என்ன மாதிரியான விளைவுகள் நிகழும் என்பன குறித்து, கைப்பிரதிகளை விநியோகித்த காரணத்திற்காக கல்லூரி மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
வளர்மதி மீதான அரசின் இத்தகைய நடவடிக்கையை, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், வளர்மதியின் தந்தை தனது மகள் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது "என்னுடைய மகள் அரசுக்கு எதிராக போராடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது என்றுதான் போராடினார். இதற்காக, மாணவி என்றும் பாராமல் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்தது மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளது.
படிப்பில் கெட்டிக்காரி எனது மகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற காரணத்தினாலேயே அவர் போராடினார். அதற்காக அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏற்றுக்கொள்ள இயலாதது." என கூறியுள்ளா