ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய மொசூல் நகரை ஈராக் இராணுவப்படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக மொசூல் நகரைக் கைப்பற்றுவதற்கான போர் நடைபெற்றுள்ளது. இந்த போரினால், பல்வேறு இடங்கள் அழிந்துள்ளன, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் ஒன்பது லட்சத்துக்கு மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த மோதலின் உச்சகட்டமாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இந்த நகரை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளது ஆறுதலாக இருக்கிறது என்றபோதிலும் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி முடிவுக்கு வரவில்லை` என்று ஐக்கிய நாடுகள் சபையின் இராக் ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மொசூல் நகரம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கு மக்களோடு மக்களால் ஐஎஸ் தீவிரவாதிகள் மறைந்துள்ளனர். அவர்கள் பெண்களே போன்று வேஷமிட்டு அந்த பகுதியில் இருந்து தப்பித்து செல்ல முயன்று வருகின்றனர்.
பர்தா அணிந்துகொண்டு, முகத்தில் அதிக மேக்கப், உதட்டில் லிப்ஸ்டிக் என தங்களை பெண்களாக மாறியுள்ளனர். இதில் என்னவென்றால் ஒரு நபர் தனது முகத்தில் உள்ள முடியை எடுக்க மறந்துள்ளார்.
இவர் இராணுவத்தினரிடம் சிக்கியதை அடுத்து, தொடர்ந்து அந்த நகரில் தேடுதல் வேட்டை நடத்தியதில் பெண்கள் ஆடையுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர்.
அவர்களின் புகைப்படத்தை இராணுவத்தினர் ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களால் அந்நாட்டில் தற்போது வைரலாகி வருகிறது.