இளம் மனைவியுடன் இரவு நேரத்தில் இளைஞன் மாயம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இளம் மனைவியுடன் இரவு நேரத்தில் இளைஞன் மாயம்

தனது இளம் மனைவியுடன் குளத்திற்கு நீராடச் சென்ற கணவன் காணாமல் போயுள்ள சோக சம்பவம், நேற்று பதிவாகியுள்ளது.
நீரில் மூழ்கும் ஆபத்தான நிலையில் இருந்த மனைவியை காப்பற்றச் சென்ற நிலையில், கணவன் காணாமற் போயுள்ளார்.
ஆரச்சிகட்டுவ பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதுடைய ராஜரட்னம் எனும் நபரே காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் தனது மனைவியுடன் நேற்று இரவு 10.30 மணிக்கு நீராடுவதற்கு குளத்திற்கு சென்றுள்ளார்.
இருவரும் நீராடிக் கொண்டிருந்த போது மனைவி நீரில் மூழ்கும் ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, மனைவியை காப்பற்றிய கணவன், குளத்தின் கற்கள் நிறைந்துள்ள பகுதி ஒன்றில் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதனையடுத்து, மனைவி கூச்சலிட்டதனை தொடர்ந்து பிரதேச மக்கள் அங்கு விரைந்துள்ளனர்.
மனைவி சம்பவத்தினை கூறியதனை தொடர்ந்து பிரதேச மக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கணவர் மீட்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த குளத்தின் கற்கள் நிறைந்துள்ள பகுதி, 30 அடி வரை ஆழமானது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினரின் உதவி பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறினர்.

About UK TAMIL NEWS