பாகிஸ்தானில் ஆடு திருடியதாக கூறி 14 வயது சிறுவனை சிலர் சித்ரவதைச் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த உச் ஷரீப் நகரில் ஆடு திருடியதாக கூறி 14 வயது சிறுவனை சிலர் அடித்து சித்ரவதைச் செய்துள்ளனர். இதில் இந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பிரேத பரிசோதனையில் சிறுவன் அடித்து கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சிறுவனின் பெற்றோர் இதற்கு காரணமானவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு காரணமான மூன்று பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது காவல்துறையினர் அந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.