யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமாரை தப்பவிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக அறியப்படுகிறது.
பருத்தித்துறைப் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் கைதியாக காணப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் அவரைக் கூட்டிச்சென்ற பொலிஸ் அதிகாரிகளும் சிறு காயங்களுக்கு ஊள்ளாகியுள்ளனர்.
எவ்வாறெனினும் கைதியாகக் காணப்படும் லலித் ஜெயசிங்கவை உரிய நேரத்துக்குள் இன்று காலை பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர். அதன்பின்னர் அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.