பிரேசிலில் நெடுஞ்சாலை நடுவே இருந்த மலைப்பாம்பை கண்டு ஆண்கள் செய்வதறியாமல் நின்ற நிலையில், இளம்பெண் ஒருவர் அதனை தூக்கி பத்திரமாக சாலையோரம் விட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின் வனப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் திடீரென போக்குவரத்து நகராமல் ஸ்தம்பித்தது.
பல மீட்டர் தூரங்களில் வாகனங்கள் அணி வகுத்து நின்ற நிலையில், இதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ள வாகன ஓட்டிகள், கூட்டம் நின்றுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்றனர்.
அப்போது அங்கு சென்று பார்த்தபோது, சாலைக்கு நடுவே மலைப்பாம்பு ஒன்று நகராமல் சாலையில் படுத்திருந்தது.
இதனைக்கண்டு வாகன ஓட்டிகள் பயந்து ஒதுங்கி நின்று மொபைல் போன் மூலமாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர் மலைப்பாம்பை யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் கையில் தூக்கினார்.
இதனை பார்த்து சுற்றி நின்ற ஆண்கள் பயத்தில் ஒதுங்கிய நிலையில், சிரித்த படி மலைப்பாம்பை கையில் பிடித்த அப்பெண் மொபைல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
பின்னர் அவர் அந்த பாம்பை வனப்பகுதி அருகே கொண்டுசென்று விட்டார்.