ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்த கணவர் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்த கணவர்

ஹைதராபாத் பீபிநகர் மண்டல் மாவட்டம் ராவிபாடு டாண்டா பகுதியில் வசித்து வரும் தம்பதியர், பனோத்சங்கர் நாயக் மற்றும் சாவித்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். தற்போதும் சாவித்ரி கர்ப்பமாக இருந்துள்ளார். தினமும் சங்கர் குடித்துவிட்டு சாவித்ரியோடு சண்டையிடுவது வழக்கம். தனக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் சாவித்ரியோடு அடிக்கடி சண்டையிட்டு, அடிப்பதையும் வழக்கமாகக்கொண்டுள்ளார். சம்பவத்தன்று, சங்கர் குடித்துவிட்டு, இப்போதும் பெண் குழந்தைதான் பெறப்போகிறாய் எனக் கூறி சாவித்ரியோடு சண்டையிட்டுள்ளார்.
சண்டைக்குப் பிறகு, சாவித்ரியோடு முதல் பெண் குழந்தையுடன் சேர்ந்து தூங்கியுள்ளனர். சங்கரோடு மற்றொரு பெண் குழந்தை தூங்கியுள்ளது. இரவில் விழித்தபோது, சங்கர் அருகில் இருந்த மண்ணெண்ணெயை சாவித்ரி மற்றும் குழந்தையின் மீது ஊற்றி பற்ற வைத்து விட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார். சாவித்ரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்துள்ளனர். சம்பவ இடத்திலேயே சாவித்ரியும் குழந்தையும் இறந்துவிட்டனர். ஆண் குழந்தை மோகத்தால் மனைவியை எரித்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About UK TAMIL NEWS