யாழ்ப்பாணம் ஆரியகுளப் பகுதியில் சீமெந்து ஏற்றிச் செல்லும் கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை நீர் கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.