ஜூலி இன்று கால் தவறி கீழே விழுந்தார், அதனால் சில மணி நேரங்கள் கழித்து வயிற்று வலியால் துடித்தார். அப்போது காயத்ரி, நமீதா, ரைசா உள்ளிட்டவர்கள் "அவ நடிக்கிறா.." என சொன்னதாக ஓவியா ஜூலியிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாக வெடித்தது.
ஜூலிக்கு நீண்ட நேரம் ஓவியா ஆறுதல் கூறினார். ஆனால் ஜூலி கடைசியாக காயத்ரியிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஓவியாவையே குற்றம்சாட்டி பேசினார்.
ஜூலி இப்படி ஓவியா முதுகில் குத்துவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், அது அதிர்ச்சியாக இருந்தது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜுலியை திட்டி வருகின்றனர்.