தனியார் தொலைக்காட்சியொன்று தற்போது நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினம் ஓர் சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மேலும், இந்நிகழ்ச்சியில் பேசப்படும் வார்த்தைகள்- வசனங்கள் எளிய மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிலும் அமைந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக களமிறங்கிய நடிகர் பரணி மீது பல குற்றச்சாட்டுகளை கூறி வெளியேற்றினர் சக பங்கேற்பாளர்கள். அவரும் விட்டால் போதுமென தலை தெறிக்க ஓடி விட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார் நடிகர் பரணி, அதன் ப்ரோமோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. தனக்கு அதிகப்படியான தொந்தரவு அளித்த பிறர் குறித்து பரணி இன்றைய நிகழ்ச்சியில் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.