பிக்பாஸ் இல்லத்தில் வெளியேறுபவர்கள் பற்றி பேச கூடாது என்பது விதி . ஆனால் ரைசா விதியை மீறி பேசியதால் அவர் தானாகவே இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமீனேஷனில் சேர்க்கப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். இதனை கேட்ட ரைசா அதிருப்ப்தி அடைந்தார்.
இதன் பிறகு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அனைவரும் குடும்பாக இணைந்து பிக்பாஸ் அளித்த வைரத்தை காக்க வேண்டும் என்று பிக்பாஸ் ஆணையிட்டார்.
அவர்களுக்குள்ளேயே ஒரு உளவாளியை தேர்வு செய்து அவர் அந்த வைரத்தை திருடி வியாழக்கிழமை வரை வைத்திருக்க வேண்டும். வைரம் திருடப்பட்ட பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஒருவார ஆடம்பர செலவுகள் கிடையாது .
குடும்பத்தின் கண்டிப்பான தலைவராக வையாபுரி தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து கணேஷ் முதல் மகனாகவும், அவரது மனைவியாக நமீதாவும், இரண்டாவது மகனாக சக்தியும் அவருக்கு மனைவியாக காயத்திரியூம், மூன்றாவது மகனாக ஆரோவும், கடைசி பிள்ளையாக ஜுலியும் தெரிவு செய்யப்பட்டனர்.
வீட்டின் வேலைகாரனாக சினேகனும், ஜுலியின் தொழியாக ஒவியாவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை செய்யவே செய்தனர்.
இந்தநிலையில் பிக்பாஸ் சக்தியை அழைத்து வைரத்தை திருடி மாற்று வைரத்தை கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
அதன்படி வைரத்தை திருடிய சக்தி வேறு போலி வைரத்தை மாற்றி யாருக்கும் தெரியாமல் உண்மை வைரத்தை மறைத்து வைத்தார்.
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் போலி வைரத்தை வீட்டில் உள்ள மற்றவர்கள் கண்டுபிடிப்பார்களா என்பது நாளைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.