நொடிப்பொழுதில் ஒரு கோடி ரூபாவை நாசம் செய்த பெண் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நொடிப்பொழுதில் ஒரு கோடி ரூபாவை நாசம் செய்த பெண்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 14-வது கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் பல பார்வையாளர்கள் கலந்து கொண்டு அங்குள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதே போல் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த கலைப் பொருட்கள் முன் நின்று பெண் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக ஒரு பொருளை தள்ளி விட்டதில் வரிசையாக இருந்த அனைத்து கலைப் படைப்புகளும் கீழே விழுந்தன.
அதில் மூன்று படைப்புகள் முழுமையாக உடைந்து விட்டதாக அக்கண்காட்சியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் மதிப்பு சுமார் 2 இலட்சம் டொலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபாய்) என் தெரிவித்துள்ளனர்.
செல்பி எடுத்ததால் 2 இலட்சம் டொலர்கள் இழப்பு ஏற்படுத்தியதை எண்ணி அப்பெண் மிகவும் சோகத்தில் உள்ளார். இது போன்று பல முறை செல்பி எடுக்கும் போது மக்கள் தெரியாமல் பொது இடங்களில் உள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.

About UK TAMIL NEWS