கடன் பெற்றவர்களிடம் தன் பணத்தை திருப்பித்தருமாறு கேட்க சென்ற பெண்ணின் ஆடைகளை கிழித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியை அடுத்த மசாலி கிராமத்தை சேர்ந்த சவிதா துந்தயா எனும் பெண், பக்கத்து கிராமத்தை சேர்ந்த சுகுரா மௌலாலி என்பவருக்கு 30,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.
சுகுரா அதை திருப்பி தராததால் அவரது வீட்டிற்கு பணத்தை கேட்க சவிதா சென்றுள்ளார்.
சவிதாவுக்கும், சுகுரா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, கோபமடைந்த சுகுரா குடும்பத்தினர் சவிதாவின் உடையை கிழித்து, அவரை தாக்கி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றுள்ளனர்.
பணத்தை கேட்ட போது சுகுரா குடும்பத்தினர் சவிதாவை தரக்குறைவாக பேசியுள்ளனர். அதை பொருட்படுத்தாத சவிதா தொடர்ந்து தனது பணத்தை கேட்டுள்ளார்.
இதனையடுத்து சவிதாவை கடுமையாக தாக்கியுள்ளனர். ஆடை கிழிந்த நிலையில் தனக்கு வேறு ஏதாவது ஆடை தருமாறு சவிதா கெஞ்சியுள்ளார்.
ஆனால் அவர்கள் உடை ஏதும் தர மறுத்துவிட்டனர். கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சவிதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரது உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சுகுரா மௌலாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.