பிரித்தானியாவில் வசித்துவரும் வேன் ப்ரெஸ்காட் மற்றும் ஸ்டீஃப் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை பிரெய்டன்.
பிரெய்டனுக்கு 2 வயதாக இருந்தபோதே புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரெய்டன் உயிரிழந்தான்.
அவன் மரணிக்கும் தருவாயில் நடந்த விஷயங்கள் கலங்க வைக்கின்றன. நள்ளிரவில் புற்றுநோய் வலியால் முணங்கியுள்ளான் பிரெய்டன். சிறுவனின் தந்தை தனது தோளில் அவனை சாய்த்துள்ளார்.
திடீரென தன்னை போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார். உடனடியாக அவனது தாய் அவனை போட்டோ எடுத்துள்ளார்.
போட்டோ எடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டான் பிரெய்டன். தற்போது அவனை இழந்து அந்த குடும்பம் தவித்து வருகிறது.பிரெய்டனின் நினைவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த குடும்பத்தினர் தினமும் அவனைப் பற்றி பேசி வருகின்றனர்.
தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் பிரெய்டனின் தாய் ஸ்டீஃப். தனக்கு ஒரு தங்கை வேண்டும் என பிரெய்டன் விரும்பியதாகவும் தனக்கு பிறக்கப்போகும் பெண் குழந்தை பிரெய்டன் கொடுத்த பரிசு எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் ஸ்டீஃப்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரெய்டனின் புகைப்படங்களை பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.