தனியார் தொலைக்காட்சியொன்று நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினம் தோறும் பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள் அரங்கேறிவருகின்றன.
அவை யாவும் டிஆர்பி காகவே அந்த தொலைக்காட்சியால் வேண்டுமென்றே ஒளிபரப்படுகிறதென மக்கள் மிக கடுமையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் ஜூலியானா வயிற்றுவலியால் துடிப்பது போலவும், அவரை சினேகன் மற்றும் சக்தி ஆகியோர் காப்பாற்ற தூக்கிச்செல்வது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அப்போதும் வயிற்று வலியால் துடிக்கும் ஜூலியைப்பார்த்து, அவ நடிக்குறா, சீ, கன்றாவி என திட்டுகிறார், 'சேரி பிஹேவியர்' காயத்ரி. ஒருவர் உடல்நல குறைபாட்டினால் துடிக்கும் போதும் மனசாட்சி இல்லாமல் பேசும் காயத்ரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.