பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப் போவது யார் என்று நெட்டிசன்கள் கணித்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீ வெளியேறினார். அனுயா மற்றும் கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றதால் பரணி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அடுத்த ஆள் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் இன்று இரவு வெளியேற்றப்பட உள்ளார். வையாபுரி, ஆர்த்தி, ஜூலி ஆகிய மூவரில் ஒருவர் இன்று எலிமினேட் ஆகிறார். ஆர்த்தியை வெளியில அனுப்புங்க ப்ளீஸ் அப்போ தான் அடுத்த எபிசோட் பாப்போம் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் ஆர்த்தி ஆர்த்தி சொல்றாங்க ஆனால் பார்ப்போம். என்ன ஆகுதுன்னு. டவுட்டா இருக்கு. வையாபுரியை அனுப்பிடுவாங்களோன்னு என மற்றொருவர் ட்வீட்டியுள்ளார். ஜூலியை வைத்து தான் பிக் பாஸே ஓடுது. டிஆர்பியை ஏற்ற ஜூலி வேண்டும். ஜூலியை வம்பிழுத்து அழ வைக்க ஆர்த்தி வேண்டும். அதனால் வையாபுரி வெளியேற வாய்ப்புகள் அதிகம் பாஸ்.