வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அவரிடம் இருந்த பணமும் திருடு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருமன்காட்டை சேர்ந்த அற்புதராஜா தர்சன் (வயது-30) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று அதிகாலை வீடு சென்றுகொண்டிருந்தபோதே குறித்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டதோடு, அவரிடமிருந்து 62100 ரூபா பணமும் திருடப்பட்டது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள மதுபான விருந்தினர் விடுதியிலிருந்து மது அருந்திவிட்டு வந்த சில இளைஞர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.