பிரித்தானியாவில் அசத்தும் இலங்கை சாப்பாடு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பிரித்தானியாவில் அசத்தும் இலங்கை சாப்பாடு

பிரித்தானியாவில் The Coconut Tree என்ற பெயரில் இலங்கை உணவகம் ஒன்று பிரபல்யமடைந்துள்ளது.
உலகப் புகழ் Trip Advisor என இணையத்தளத்தினால் அந்த உணவகத்திற்கு 5 நட்சத்திர தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் நம்பகமான உணவு வழங்கப்படுவதோடு நட்புடன் பணியாற்றும் பணியாளர்களும் உள்ளனர்.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 இலங்கை இளைஞர்கள் The Coconut Tree என்ற உணவகத்தை திறந்துள்ளனர்.
கொழும்பில் வசித்த இந்த இளைஞர்கள் 11 வயதில் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். அவர்களில் பிரவின் தங்கையா என்ற சமையல் கலைஞர் 2004ம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு சென்று Croydonஇல் வசிக்கும் அவரது குடும்பத்தவர்களுடன் குடியேறினார்.
Rashinthe Rodrigo இந்த உணவகத்தின் முகாமையாளராவார். 2006ம் ஆண்டு பிரித்தானியாவில் அல்லது அவுஸ்திரேலியாவில் சமையல் கலையை கற்க தீர்மானித்தார்.
2008ம் ஆண்டில், தனுஷ்க பெர்னாண்டோவும் டிரன்ஞன் பெர்னாண்டோவும் பிரித்தானியாவுக்கு சென்றனர். இந்த நான்கு பேரும் Croydonஇல் ஒரே வீட்டை பகிர்ந்து கொண்டனர், அதேசமயம் அவர்கள் படிப்பையும் நிறைவு செய்தனர்.
மித்ரா பெர்னாண்டோ 2015ம் ஆண்டு இந்த குழுவுடன் இணைந்தார். Cheltenham பகுதியில் அவர் வாழ்ந்து வந்தார், அவர் கணக்கில் Rashinthe Rodrigoவுக்கு ஒரு வேலை வழங்கினார்.
2016ம் ஆண்டு இந்த குழுவினர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவர்களுக்கு வெளியேற நேரிட்டுள்ளது. இந்த நேரத்தில் குறைந்த விலையில் தங்குவதற்கு இடம் ஒன்றை தெரிவு செய்தவர்கள்.
The Coconut Tree என்ற பெயரில் சிறிய அளவிலான உணவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
6 மாதங்களுக்குள் அவர்கள் தங்களை மேம்படுத்தி கொண்டுள்ளனர். குழுவாக இணைந்து தங்களுக்கு கிடைத்த இடத்தை சுத்தப்படுத்தி முடிந்த வரை அழகுபடுத்தி தங்கள் உணவக நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொண்டனர்.
அதற்கமைய இந்த உணவகம் திறந்து 6 மாதங்களுக்கு உலக புகழ் Trip Advisor என இணையத்தளத்தில் முதலிடத்தை பிடித்தது. அவர்களுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இலங்கை கலாச்சாரத்திற்கமைய அந்த உணவகம் மேலும் சிறப்பாக நடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

About UK TAMIL NEWS