பூண்டுலோயா பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது காணால் போன இரண்டு டிப்பர் லொறியை மீட்டதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டும் மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் காணால் போனதாக லொறி உரிமையாளர்களினால் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்த நிலையிலே மேற்படி இண்டு லொறிகளும் குருணாகல் மற்றும் மிஹிரிகம பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தனது லொறி காணாமல் போனதாக பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்த லொறி உரிமையாளர் இருவர்களில் ஒருவர் 23 ம் திகதி அனுராதபுரம் ரூவன்வெளிபுர பகுதியில் காணமல் போன தனது லொறி போன்றதொரு டிப்பர் லொறியை கண்டதுடன் உடனடியாக பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிஸார் குறித்த லொறியை குருணாகல் பிரதேசத்தில் உள்ள வீ டொன்றில் தரித்து நின்ற போது சுற்றிவளைத்ததுடன் ஒருரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணையை மேற்கொண்டபோது பூண்டுலோயாவில் காணாமல் போன மற்றுமொருலொறியையும் மிஹிரிகம பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவரும் மிஹிரிகம பிரதேத்தை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், கடத்தப்பட்ட மேற்படி இரண்டு டிப்பர் லொறிகளின் எஞ்சின் மற்றும் செசியின் இலக்கங்கள் மாற்றப்பட்டு வாகன இலக்கத்தகடும் மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் கடத்தல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொள்கிறனர்.