ரயிலில் இளைஞர் செய்த அசிங்கம்!! பீதியில் பெண் பயணி.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ரயிலில் இளைஞர் செய்த அசிங்கம்!! பீதியில் பெண் பயணி..

மும்பையில் உள்ள சி.எஸ்.டி.ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 29ம் தேதி காலை நேரத்தில் நாசிக்கை நோக்கி பயணிக்க தயாராக இருந்தது டபோவன் எக்ஸ்பிரஸ். அந்த ரயிலில் பயணிக்க பெண் பயணி ஒருவர் வந்துள்ளார்.
இந்நிலையில் 20வயது நிரம்பிய இளைஞன் பிரதான் அந்த பெண் பயணியின் எதிரே அமர்ந்து இருந்தார். இதனையடுத்து இளைஞர் பிரதான் செய்த காரியம் அந்த பெண்ணை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எந்தவித கூச்சமும் இன்றி இளைஞர் பிரதான் பெண் பயணி முன்னிலையில் சுயஇன்பம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயணி, தனக்கு பாதுகாப்பு இல்லை என கருதி ரயிலில் இருந்து இறங்கினார்.
இது தொடர்பாக அந்த பெண் பயணி தனது சமூகவலைதள பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோ சமூகவலைதள பக்கங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ரயில்நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவை கைப்பற்றினர். பின்னர் சம்பவத்தில் தொடர்புடைய பிரதானை உடனடியாக கைது செய்தனர்.
இந்தியாவில் திரைப்படங்களில் நடிக்கும் பெண்களின் பாதுகாப்பு தான் கேள்விக்குறியாக உள்ளது என்பது போன்ற தோற்றம் சமீபகாலமாக திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் தினம் தினம் நூறு அப்பாவி பெண்கள் தொடர்ந்து இதுபோன்ற பாலியல் சம்பவங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு இந்த சம்பவம் ஒரு சின்ன உதாரணம் தான்...

About UK TAMIL NEWS