கனடாவில் இலங்கை மூதாட்டிக்கு காத்திருந்த சோகம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கனடாவில் இலங்கை மூதாட்டிக்கு காத்திருந்த சோகம்

கனாடாவின் ஸ்காபுரோவில் நிகழ்ந்த விபத்தொன்றில் 71 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 11 மணியளிவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்காபுரோவில் (Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில்) நிகழ்ந்த குறித்த விபத்தில் 71 வயதான சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
Toronto போக்குவரத்துச் சபையின் (TTC) ) பேரூந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேரூந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர் Torontotpy வில் பிரபலமாக நகையகம் மற்றும் பணமாற்றுச் சேவையான பாலா செல்வம் நிறுவனத்தின் உரிமையாளரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS