தனது கணவன் மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பிச் சென்ற பெண் மீதும் அவரது கள்ளக் காதலன் ஆகியோர் மீது கத்திக்குத்து மேற்கொண்ட நபர் பொல்பித்திகம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் பெண்ணின் சட்டரீதியான கணவனாலேயே அப்பெண் மீதும் அவரது கள்ளக் காதலலன் மீதும் இவ்வாறு கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் கல்னேவ, அவுக்கன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான பெண்ணும் 35 வயதான திருமணமாகாத அவரது கள்ளக் காதலனும் என தெரியவந்துள்ளது.
இப்பெண்ணின் சட்டரீதியான கணவரால் கடந்த 30 ஆம் கல்னேவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடொன்றின் விசாரணைகளுக்காக குறித்த பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளனர்.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இந்த ஜோடி கல்னேவவிலிருந்து குருணாகல் நோக்கி பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கையில், அப்பெண்ணின் சட்டரீதியான கணவர் சாலியகம பிரதேசத்தில் வைத்து குறித்த பஸ்ஸின் முன்பக்க கதவின் ஊடாக உள்நுழைந்து பஸ்ஸினுள் அமர்ந்திருந்த தனது மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் கூரிய ஆயுதத்தினால் சரமாரியாக வெட்டிக்காயப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் பெண்ணின் தலைப்பகுதியிலும் முழங்காலிலும் காயம் ஏற்பட்டதோடு அவரது கள்ளக்காதலனுக்கு தோற்பட்டை மற்றும் கால்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் அவர்கள் பயணித்த பஸ்ஸிலேயே பொல்பிதிகம வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தில் பெண்ணின் சட்டரீதியான கணவர் கல்னேவ பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பொல்பிதிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.