குழந்தையைப் பிரசவித்த தாய், வைத்தியசாலையி லிருந்து வீடு செல்ல அனு மதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் நின்றி ருந்த பெண்ணிடம் உடுப்புப் பையை எடுத்துவருகிறேன் குழந்தையை வைத்தி ருங்கள் என்றுகூறிச் சென்ற அவர் தலைமறைவானார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இது குறித்து மேலும் தெரியவரு வதாவது:
வைத்தியசாலையின் விடுதியில் பிறந்து ஐந்தே நாள்களான குழந்தையே இவ்வாறு தாயாரால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. அவர் குழந்தையைப் பிரச வித்து ஐந்து நாள்களாக வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் தாயும் குழந்தையும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சா லைக்கு அண்மையில் குறித்த தாய் நின்றிருந்த போது அருகில் நின்ற பெண்ணை உதவிக்கு அழைத்துள்ளார். குழந்தை பிரசவித்த அந்தத் தாயின் நிலைமையைப் பார்த்து அருகில் நின்ற பெண் உதவி செய்தார்.
தனது புடவை யுடன் கூடிய பொதியை வைத்தியசாலை விடுதியில் வைத்துவிட்டு வந்துள்ளேன். அங்கு சென்று அதனை எடுத்து வருகிறேன். அது வரை இந்தக் குழந்தையை வைத்திருங்கள் என்றுகூறித் தான் பெற்ற குழந்தையை அங்கு நின்ற பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் தாயார் சென்றுள்ளார்.
பின்னர் அவர்திரும்பி வரவே யில்லை. குறித்த தாய் நெடுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் கொண்ட பெண் அது தொடர்பில் அங்கு நின்றவர்க ளிடம் உதவி செய்த பெண் சம்பவத்தை விபரித்துள் ளார். அது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் நடத்தியும் குறித்த தாயைக் காணவில்லை.
அதன்பின்னர் குறித்த குழந்தையை வைத்திய சாலைத் தரப்பினர், புதிதாகப் பிறந்த குழந்தைகளை வைத்திருக்கும் பகுதியில் வைத்திருக்கின்றனர்.
இது தொடர்பில் யாழ்ப்பா ணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்ப ட்டுள்ளதாகத் தெரிவிக்கப்ப ட்டது. போதனா வைத்திய சாலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவனை இழந்த பெண் ஒருவர் பிரச வத்துக்காக விடுதியில் தங்கியுள்ளார்.
அந்தப் பெண் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் மேலதிக விடயங்க ளைக் கூறமுடியும் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.