தாய்லாந்தில் சிறுமிகளை கடத்தி இணையத்தில் விபச்சாரம் செய்து வந்த பிரபல ஆபாச மொடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான Alisa Jaidee என்பவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். Alisa Jaidee நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இரகசியமாக அவரை அணுகியுள்ளனர்.
இந்நிலையில் Alisa Jaidee போன் மூலம் இளம் பெண்களின் புகைப்படத்தை இரகசிய பொலிசாருக்கு அனுப்பி அவர்கள் விபச்சாரிகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து Alisa Jaidee விபச்சாரம் நடத்தி வருவதை கண்டறிந்த பொலிசார் பாங்காக் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக 16 வயது சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Alisa Jaidee மீது கடத்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.