துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து ஓடிய தம்பி ஆற்றில் மூழ்கி பலி ; அண்ணன் வைத்தியசாலையில் அனுமதி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து ஓடிய தம்பி ஆற்றில் மூழ்கி பலி ; அண்ணன் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இன்று நண்பகல் 12,4 மணியளவில் காயங்குடா கிராமத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பாலமடு ஆற்றில் கொம்மாதுறை 10 ஆம் கட்டை சந்தியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தம்பியும் உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிக்கொண்டிருந்த வேளை அந்தப்பகுதியால் சென்ற விசேட அதிரடிப்படையினர் உழவு இயந்திரத்தை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்த, வேட்டுச்சத்தத்திற்கு பயந்து ஆற்றில் பாய்ந்த போது தம்பியான ச.மதுசன் (17வயது) நீரில் மூழ்கி இறந்துள்ளதுடன் அண்ணணான கிசாந்தன் (19வயது) ஆபத்தான கட்டத்தை தாண்டி செங்கலடி வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
செங்கலடி பிரதேச செயலக கிராமங்களான கரடியனாறு ,மரப்பாலம், கிதுல், உறுகாமம், போன்ற கிராம அபிவிருத்தி சங்கங்கள் பலதடவை இப்பகுதியில் ஆற்றுமண் கடத்தலை நிறுத்தச் சொல்லி இதுவரை ஆர்ப்பாட்டம் பண்ணியும் இதில் மண் கடத்தலை நடத்தும் கனகர வாகனங்களின் இலக்கம், உரிமையாளர் பெயர் கொடுத்தும் இவ் கறுத்தப்பால வழியால் செல்லும் நேரங்களையும் துல்லியமாக கொடுத்தும் இதுவரை பொலிசாரோ, செங்கலடி பிரதேச செயலாளரோ எதுவித நடவடிக்கையும் எடுக்காதது பல ஆச்சிரியமாக உள்ளது. இதேவேளை, குறித்த மண் போர்மிட் வைத்திருப்பவர்கள் முக்கிய அரசியல், அரச அதிகாரிகளின் முக்கியஸ்தர்கள் என்பதால் இதனை உரிய அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருக்க தொடர்ந்து கடத்தல் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மண் கடத்தலுக்கு பின்புலமாக இருக்கும் முக்கியஸ்தர்களை விடுத்து ஏழைகளை இராணுவம் மிரட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த வருடமும் உறுகாமத்தைச் சேர்ந்த ஏழைத்தமிழர் இராணுவ துப்பாக்கி வேட்டுச்சத்ததிற்கு பயந்து ஆற்றில் பாய்ந்து மூழ்கி இறந்தார். இதே போன்று இதே ஆண்டும் மற்றுமொரு தமிழ் இளைஞனின் உயிர் பலியெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தின் பின்னராவது செங்கலடியில் மண்கடத்தும் முக்கிய நபர்களைப் பிடித்து அவர்களின் பேர்மிட் தடை செய்ய வேண்டும். இல்லாவிடின் இதைப்போன்று ஏழை குடும்பத்திலிருந்து கூலிக்கு வேலைசெய்யும் ஏழை மக்களின் உயிர்ப்பலிகள் எடுக்கப்படும் சோகம் தொடரும் என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

About UK TAMIL NEWS