பாம்பை கண்டால் எப்பேர்ப்பட்ட படையும் நடுங்கும். ஆனால் சீனாவில் சதுப்பு நில பகுதியைச் சேர்ந்த சிறுவர்களான அக்கா, தம்பி இரண்டு பேர் கொடிய விஷமுள்ள பாம்புகளை அவை இருக்கும் இடங்களிலே சென்று விளையாட்டு தனமாகவே பிடித்து பைகளில் அடைத்து வருகின்றனர்.
நம்மில் பலபேர் பாம்பு என கத்தினாலே தலை தெறிக்க ஓடுகின்றனர். எதிர்பாராமல் வரும் பாம்பிற்கே இந்த கதி. ஆனால் சதுப்பு நிலங்களில் மாடுகளை பராமரித்து வரும் இந்த சிறுவர்கள் வேலை நேரம் போக பாம்புகளை பிடிப்பதற்காகவே வீட்டில் இருந்தே பையுடன் கிளம்புகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் பிடிக்கும் பாம்புகளை விட இவர்கள் உயரம் கம்மிதான். அதிலும் இந்த சிறுமி பாம்பு இருக்கும் இடத்தை முகர்ந்து பார்த்தே தெரிந்து கொண்டு தன் தம்பியின் உதவியுடன் குழிகளை தோண்டி பாம்புகளை அரெஸ்ட் செய்து பையில் போற்று விடுகிறாள். இவர்களுக்கு இந்த ஆர்வமும் தைரியமும் எங்கிருந்து வந்தது என்பது சற்று கேள்விக்குறிதான்.
ஆனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இந்த இரண்டு பேர் கொடிய விஷமுள்ள பாம்புகளையும் மிக சாதாரணமாக கையாளும் திறமைக்கு
தகுந்த இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் இவர்களது வாழ்க்கை வெளிச்சமாகும்