ஒரு சூழல்நிலை, ஒரு சந்தர்பத்தை ஆண்கள் கையாள்வதற்கும், பெண்கள் கையாள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆண்கள் ஒரு செயலுக்கு சாதரணமாக வெளிப்படுத்தும் பாவத்திற்கும், பெண்கள் வெளிப்படுத்தும் பாவத்திற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் கண்கூட பார்க்க முடியும்.
உதாரணமாக, அந்த பெண்ணின் தோழியை காதலிக்க நீங்கள் உதவி நாடி போகும் போது, அந்த பெண்ணின் மனதில், ஒன்று பொறாமை குணம் வெளிப்படும், அல்லது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இதுவே, ஆண்கள் என்றால் முதல் வேலையாக சேர்த்து வைத்துவிட்டு, ட்ரீட் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இதுபோல ஆண்களிடம் ஒப்பிடுகையில், பெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் என்னென்ன என்று இனிப் பார்க்கலாம்…
அதிசய குணம் 1
நீங்கள் அந்த பெண்ணுடன் பேசுவது, அவரது அழகான தோழியை கரெக்ட் செய்ய என்பது அவருக்கு தெரிந்துவிட்டால் பத்திரகாளியாக மாறிவிடுவார்கள். பெண்களால், ஒரு ஆண், தன் முன்னிலையில் வேறு பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாது.
அதிசய குணம் 2
சராசரியாக பெண்கள் ஓர் ரகசியத்தை பாதுகாக்கும் நேரம் 47 மணிநேரம் 16 நிமிடங்கள்.
அதிசய குணம் 3
பெண்களால் அவர்களது கைகளை வெறுமென வைத்துக் கொள்ள முடியாதாம். அதனால், ஹேன்ட்பேக், பர்ஸ், புத்தகம் என எதையாவது வைத்துக் கொண்டே இருக்கிறார்களாம். அல்லது உடன் இருக்கும் நபர்களின் கைகளையாவது பிடித்துக் கொள்வார்கள்.
அதிசய குணம் 4
பெண்களால் குளிக்க செல்லும் முன்பு மேசையில் வைத்த ஹேர் பேண்டை கண்டுப்பிடிப்பது கஷ்டம். ஆனால், சரியாக ஏழு மாதத்திற்கு முன்பு, வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருப்பார்கள்.
அதிசய குணம் 5
ஓர் ஆய்வில் சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 120 மணிநேரத்தை கண்ணாடி பார்பதற்கு பயன்படுத்துகிறார்கள் என அறியப்பட்டுள்ளது. இந்த கணக்கை வைத்துப் பார்த்தல் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஐந்து வருடத்தை கண்ணாடி முன்பே கழிக்கிறார்கள் பெண்கள்.
அதிசய குணம் 6
பெண்களுக்கு பல ஆண்கள் மீது ஆவல் ஏற்படலாம், ஆனால், ஒரு ஆணின் மீது தான் அவர்களது காதல் எப்போதுமே சார்ந்திருக்குமாம்.
அதிசய குணம் 7
உங்கள் மீது விருப்பம் கொண்டுள்ள பெண்ணை என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள், குறை கூறுங்கள். ஆனால், அவர்கள் எதற்கும் லாயக்கு இல்லை என்று கூறினால் அவர்கள் முழுவதுமாக மனமுடைந்து போய்விடுவார்கள்.