வாய்ப்புக்காக நடிகரை படுக்கைக்கு அழைத்த பெண்கள்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வாய்ப்புக்காக நடிகரை படுக்கைக்கு அழைத்த பெண்கள்!

கோலிவுட் முதல் ஹொலிவுட் வரை வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு நடிகரை பெண்கள் இப்படி படுத்துவதை பார்த்தால், 'இது அதுக்கும் மேல' என்று தோன்றுகிறது.
சினிமா துறையில் வாய்ப்பு தரவேண்டுமானால், பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பலர் தன்னை வற்புறுத்தியதாக பொலிவுட் இளம் நடிகர் ஆஷிஷ் பிஸ்ட் பகீரங்க பேட்டியளித்துள்ளார்.
பொலிவுட்டின் இளம் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளவர் ஆஷிஷ் பிஸ்ட். இவர் நடித்த 'ஷாப்' என்ற பொலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாகயுள்ளது.
மேலும், சில திரைப்படங்களிலும் இவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இவர், சினிமாவில் நுழைய முயன்ற போது, பெண்களுடன் படுக்கையை பகிருந்து கொள்ளுமாறு தன்னை பலர் வற்புறுத்தியதாக தெரிவித்தார்.
பல தயாரிப்பாளர்களே தன்னிடம் இந்த கேள்விகளை கேட்டதாகவும், சிலர் வீட்டிற்கு அழைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தன்னுடைய அலைபேசிக்கு பல பெண்கள், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பினர் என்றும், செல பெண்கள் தன்னை வீட்டுக்கு அழைத்து, உனக்கு வாய்ப்பு வேண்டுமானால் என்னிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் அதற்கு மறுத்து விட்டதாகவும், அந்நிலையிலும் தனக்கு ஷாப் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், தான் அதிர்ஷ்டசாலி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS