இலங்கையை சேர்ந்த இளம் விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கையை சேர்ந்த இளம் விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம்

இலங்கையை சேர்ந்த இளம் விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சு மற்றும் ரோயல் இராணுவ பாடசாலை இணைந்து முதல் முறையாக ஏற்பாடு செய்த விஞ்ஞான மாநாட்டில் இலங்கையின் இளம் விஞ்ஞானி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
நாலந்தா பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரகிது என்ற மாணவரே இவ்வாறு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
காற்று மாசு தொடர்பான ஆய்விற்காக அவர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
அந்த பாடசாலையின் ரவிந்து மனோஹர, துமன் பீரிஸ் மற்றும் சுஹித் ஜயசேகர ஆகிய மாணவர்களுக்கு தங்களின் ஆய்விற்காக வெண்கல பதக்கங்கள் இரண்டினை வென்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் சர்வதேச நீதிபதிகள் குழுக்களுக்கு முன்னால் தங்களின் ஆய்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அங்கு முன்வைக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியா, ஈரான், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், குவாம் மாநிலம், நைஜீரியா மற்றும் லாகூர் உட்பட பல நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கு ரகிது ரன்தில் ஜேர்மனில் இடம்பெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டிலும் வெளிப்பதக்கம் வென்றுள்ளார். அவர் அங்கு இளம் விஞ்ஞானியாக கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

About UK TAMIL NEWS