யாழில் மீண்டும் வீடு புகுந்து மாண­விக்கு நடந்த விபரீதம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழில் மீண்டும் வீடு புகுந்து மாண­விக்கு நடந்த விபரீதம்

வீடு புகுந்து மாண­வி­யைக் கடந்த முயன்ற குழுவை ஊர் இளை­ஞர்­கள் மடக்­கிப் பிடித்­த­னர். அவர்­களை நன்­றா­கக் கவ­னித்த பின்­னர் வல்­வெட்­டித்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.
இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது. இமை­யா­ணன் கிழக்­குப் பகு­தி­யைச் சேர்ந்த பதின்ம வய­து­டைய மாணவி ஒரு­வ­ரைத் திரு­ம­ணம் செய்­வேன் என்று கூறி இளை­ஞர் ஒரு­வர் அழைத்­துச் சென்­றுள்ளா.
பெற்­றோர் வல்­வெட்­டித்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் அது தொடர்­பில் முறைப்­பாடு செய்­த­னர். இரு­வ­ரும் பொலிஸ் நிலை­யத்­தில் சர­ண­டைந்­த­னர்.
மாண­வி­யின் வயதை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இரு­வ­ரின் சம்­ம­தத்­து­டன் பிரிந்து செல்ல பொலி­ஸார் அனு­ம­தித்­த­னர். நேற்று அதி­காலை 12 மணி­ய­ள­வில் ஹயஸ் ரக வாக­னத்­தில் வந்த பெண்­கள் இரு­வர் உட்­பட 7 பேர் கொண்ட குழு­வி­னர் இமை­யா­ணன் பகு­தி­யில் உள்ள வீடொன்­றின் சுற்­றா­ட­லில் உள்ள மின் விளக்­கு­களை அணைத்து வீட்­டுக்­குள் அத்து மீறி நுழைந்­த­னா்.
அவா்­கள் வீட்­டி­லி­ருந்த வயோ­தி­பப் பெண்­ணைத் தாக்­கி­னர். அங்­கி­ருந்த மாண­வி­யைக் கடத்த முயற்சி செய்­த­னர். அத­னால் வீட்­டில் இருந்­தோர் அப­யக் குரல் எழுப்­பி­னா்.
அய­லி­லுள்ள இளை­ஞர்­கள் ஒன்று கூடி­யதை அடுத்து தாக்­கு­தல் மேற்­கொண்­ட­வர்­கள் தப்­பி­யோட முயற்­சித்­த­னர். அவர்­க­ளைச் சுற்றி வளைந்த இளை­ஞர்­கள் அவர்­க­ளில் இரு­வரை மடக்­கிப் பிடித்­த­னர். ஏனை­ய­வர்­கள் ஹயஸ் வாக­னத்­தில் தப்­பிச் செல்ல முயற்­சித்த போது அவா்­க­ளை­யும் பிடித்­த­னர்.
அவர்­க­ளுக்கு முறை­யான கவ­னிப்பு வழங்­கிய பின்­னர் வல்­வெட்­டித்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.
இந்­தக் கடத்­த­லு­டன் தொடர்­பு­டைய ஒரு­வர் தப்­பி­யோடி தலை மறை­வா­கி­யுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை வல்­வெட்­டித்­து­றைப் பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.
மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் தாவ­டிப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

About UK TAMIL NEWS