கட்டுநாயக்க விமானப் படை முகாம் அமைந்துள்ள பகுதியில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானப் படை முகாமின் பெண்கள் விடுதியின் பின்புறத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதி ஒன்று இருப்பதை கண்டுள்ளனர்.
பின்னர் விமானப்படை முகாமின் உயர் அதிகாரிக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் பொதியை சோதனையிட்டபோது அதில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், பொலிஸார் பெண்கள் விடுதியினுள் சோதனை மேற்கொண்டபோது விடுதியிலுள்ள படுக்கை ஒன்றின் விரிப்பில் இரத்தம் படிந்திருந்ததை அவதானித்துள்ளனர்.
எனினும் அக்கட்டிலில் தங்கியிருந்த விமானப்படை வீராங்கனை வயிற்றுவலி காரணமாக விமானப்படை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணிடம் சீதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.