`துப்பறிவாளன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொது செயலாளருமான நடிகர் விஷால், இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் அரோல் கொரொலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் விஷால் பேசியதாவது,
“நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது `துப்பறிவாளன்’ என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். `துப்பறிவாளன்’ திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு `துப்பறிவாளன்’, `பாண்டியநாடு’ படத்தை விட முக்கியமான படமாகும்.
நானும், பிரசன்னாவும், சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது. நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்.
நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன், ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன். ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 100-வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்”.
இவ்வாறு விஷால் தெரிவித்தார்.