யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியிருந்ததுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ்,
நானே இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
இந்த துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்திருந்தார்.
யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த மாணவர்கள் இருவரும் உயிரிழந்திருந்தனர்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவமானது நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் கூறியுள்ளார்.
இவ்வாறு யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உறுதியாக கூறியுள்ளமையானது சம்பம் தொடர்பான குற்றவாளியை தப்பிக்க வைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் என பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.