எப்போதும் தமிழகத்தில் இருந்து இலங்கை செல்ல வேண்டுமென்றால் சென்னை வழியாகத்தான் செல்லலாம்.
ஆனால் அதிக இலங்கை மக்கள் அகதிகளாக கோயம்புத்தூரில் தான் அதிகம் வசிக்கிறார்கள்.
கோயம்புத்தூரில் பொள்ளாச்சியை ஒட்டிய ஆழியார் என்னும் ஊரில் பெரும்பாலோர் வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அங்கு உள்ள இலங்கை மக்கள் திரும்ப அவர்கள் நாட்டிற்க்கே செல்ல வேண்டும் என்றால் கோயம்புத்தூரில் இருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு தான் வர வேண்டி இருந்தது.
கோயம்புத்தூரில் இருந்து சென்னை சுமார் 12 மணி நேர தூரம் பயணிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது கோயம்புத்தூரில் வசிக்கும் ஈழத்து மக்களுக்காக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து 17 விமானங்கள் கொழும்பு செல்ல வசதி செய்துள்ளனர்.
பயனச் சீட்டின் விலை குறைந்தபட்சம் இந்திய மதிப்பின் 4706 ரூபாய் ஆக இருக்கிறது. அதிகபட்சம் இந்திய மதிப்பின் படி 6629 ரூபாய் ஆக உள்ளது.
இதனால் அங்கு உள்ள ஈழத்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இலங்கை செல்ல கோயம்புத்தூரில் விமானம் ரெடி...!