இந்தியாவின் ஹைதராபாத்தில் பறக்கும் பாம்பு ஒன்று சந்தை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதியில் குறித்த பாம்பு சுழலும் ஷட்டர் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரை பறக்கும் பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை, பீகார், ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த அரிய வகை பறக்கும் பாம்புகள் லேசான விஷத் தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வகைப் பாம்புகள் ஆந்திராவிலோ தெலங்கானாவிலோ இதற்கு முன்பு காணப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகளில் இந்த பாம்பு மறைந்திருந்து வந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் அமைப்பு ஒன்றினால் பிடிக்கப்பட்ட பாம்பு, பின்னர் சனிக்புரி விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.