அநுராதபுரத்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரொருவர் இரண்டு மாதங்களாக பொலிஸார் மற்றும் நீதிமன்றத்தையும் புறக்கணித்து வந்துள்ளார். நீதிமன்றத்தை புறக்கணித்து வந்ததன் காரணமாக அந்த நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (15) அந்த நபர் தனியாக அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் சரணடைந்துள்ளார். குறித்த நபர் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் சரணடைந்தது பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்துயுள்ளது.
இந்த நபரை யாராவது தாக்கி ஆடைகளை கழற்றினாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு வந்தார என பொலிஸார் சந்தேகிக்கிறது. இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.