குழந்தை பிறந்ததும் கனடாவில் நிகழ்ந்த அரிய சம்பவம். - Eelatheepam Sri Lankan Breaking NEWS

குழந்தை பிறந்ததும் கனடாவில் நிகழ்ந்த அரிய சம்பவம்.

கனடா நாட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஆண் அல்லது பெண் என எதுவும் குறிக்கப்படாமல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது உலகளவில் நிகழ்ந்த முதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
பெற்றோருக்கு குழந்தை பிறந்தவுடன் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என தீர்மானிக்கப்பட்டு உடனடியாக பிறப்பு சான்றிதழில் குறிக்கப்படும்.
குழந்தை வளரும்போது எதிர்ப்பாராத விதமாக திருநங்கையாக அல்லது ஓரினச்சேர்க்கையாளராக மாறினால் பின்னர் பாலினம் மாற்றி குறிக்கப்படும்.
ஆனால், எந்த நாட்டிலும் நடைபெறாத வகையில் இக்குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு பாலினத்தை குறிக்க வேண்டாம் என மறுப்பு தெரிவித்து அதில் தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.
Kori Doty எனப்பெயரிடப்பட்ட அவர் அடிப்படையில் ஒரு திருநங்கை ஆவார். ஆனால், தன்னை ஒரு ஆண் அல்லது பெண் எனக் குறிப்பிடுவதில் அவருக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் தனது பிறப்பு சான்றிதழில் உள்ள பாலினத்தை நீக்க போராடி வருகிறார்.
இவருக்கு கடந்த நவம்பர் மாதம் Searyl Atli எனப்பெயரிடப்பட்ட குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பாலினத்தை குறிக்க வேண்டாம் எனவும் அந்த இடத்தில் ‘U’ எனக் குறிப்பிடமாறு கோரிக்கை விடுத்து அதில் வெற்றிப் பெற்றுள்ளார்.
ஆங்கில வார்த்தையான U என்பதற்கு ‘Undetermined'(தீர்மானிக்கப்படவில்லை) எனப் பொருளாகும்.
இதுக் குறித்து அவர் பேசியபோது, ‘எனது குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அவர் வளரும்போது அவரே தீர்மானித்துக்கொள்ளட்டும்.
எனக்கு ஏற்பட்ட நிலை எனது குழந்தைக்கும் ஏற்பட அனுமதிக்க மாட்டேன்’ என விளக்கம் அளித்துள்ளார்.

About UK TAMIL NEWS