சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான துறைமுக நகரத்தை, அமெரிக்காவின் பிரதான கட்டட வடிவமைப்பு நிறுவனமான, ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.
1.5 பில்லியன் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் நிறைவு செய்யப்படும் போது, இதன் பெறுமானம் 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும்.
இந்த நிலையில், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை வடிவமைப்புச் செய்வதற்கான உடன்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக, உலகின் முன்னணி கட்டட வடிவமைப்பு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி காணப்பட்டது.
பிரதானமாக, ஜப்பானின் நிக்கென் செக்கெய் மற்றும் சான்பிரான்சிஸ்கோவின் ஜென்ஸ்லர் மற்றும், ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் ஆகிய நிறுவனங்களுக்கிடையில் மிகவும் கடுமையான போட்டி இருந்தது.
இதில், ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் நிறுவனமே, துறைமுக நகரத்தை வடிவமைப்பதற்கான கட்டளையைப் பெற்றிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் வடிவமைப்பு தொடர்பான மாதிரிப் படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.